தர்காநகரில் சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு இன்று இழப்பீடு

327 0

கடந்த 2014ம் ஆண்டு அளுத்கம, தர்காநகர் பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சேதமடைந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று இடம்பெற உள்ளது. 

இவ்வாறு சேதமடைந்த 122 வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கான இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

மொத்தமாக 188 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின் படி இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

Leave a comment