சிறீலங்கா அரசு இனவெறிக் காடையர்களினால் அரங்கேற்றிய 1983 ஆம் ஆண்டு யூலை 23 தமிழினப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவு கவனயீர்ப்பு நிகழ்வு பாரிசில் பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2018) திங்கள்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
ஆரம்பநிகழ்வாக கறுப்பு யூலை படுகொலையில் சாவடைந்த மக்கள் நினைவாக ஈகைசுடர் ஏற்றப் பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.
தமிழீழ மக்கள் பேரவை சார்பில் திரு திருச்சோதியும், இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி பானுசா அவர்களும், மாட்டினிக் நாட்டு மனிதநேயச் செயற்பாட்டாளர் திருமதி Graziella Ravin அவர்களும் , மூதாளர் பேரவையைச் சேர்ந்த திரு . கிருபா அவர்களும் உரையாற்றியிருந்தனர்.
இவர்களின் உரைகளில் 1983 இனக்கலவரத்தின் நேரடிச் சாட்சியாக மூதாளர் பேரவையைச் சேர்ந்த திரு கிருபாஅவர்களின் உரை அமைந்திருந்தது. செல்வி பானுசா அவர்கள் பிரெஞ்சு மொழியில் சிறீலங்காவில் 1948 தொடக்கம் இன்று வரை இடம் பெறும் தமிழின அழிப்பு குறித்தும் உரையாற்றியிருந்தார்.
தமிழீழ மக்கள் பேரவைசார்பில் உரையாற்றிய திரு திருச்சோதி அவர்கள் தமிழினம் விடுதலை அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள் ஓயப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
பிரெஞ்சு மொழியில் வெளிநாட்டவர்களுக்கு கவனயீர்ப்பின் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப் பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் பலரும் எமது மக்கள் சிறிலங்கா அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கேட்டறிந்து தமது ஆதங்கங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இறுதியாக தமிழரின் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் ஒன்று கூடல் நிறைவு பெற்றது.
(ஊடகப்பிரிவு- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

- Home
- புலம்பெயர் தேசங்களில்
- கறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பிரான்சு !
ஆசிரியர் தலையங்கம்
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் புதிய சட்டத்தின் ஆபத்துகளும்!
February 15, 2026 -
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026











