கோத்தபாயவின் புதைகுழியைக் காட்டிக்கொடுத்துவிட்டார் விமல்வீரவன்ச!

303 0

wimal-weeravansa-1பயந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உருவான மனிதப் புதைகுழிகளின் சரியான இடத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சில நாட்களுக்கு முன்னர் கண்டியிலுள்ள மல்வத்த பீடாதிபதியின் குருமுதல்வர் திப்பட்டுவாவ சிறீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்தபோது இந்த இடத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் கீழ் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ, போர் வெற்றியை அறிவித்த அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச்சாட்டுக்களுக்காக கைதுசெய்யப்படலாம் என விமல் வீரவன்ச அச்சங்கொள்கின்றார்.

விமல் வீரவன்சவைப் பொறுத்தவரையில் அண்மையில் கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகளின் வித்துடல்களை விதைத்த துயிலுமில்லத்தைவிட்டு இராணுவத்தினர் வெளியேறியமை பாரிய பிரச்சனையாக உள்ளது. அத்துடன், இந்த புதைகுழியில் உள்ள வித்துடல்கள் பொதுமக்களினதா அல்லது விடுதலைப்புலிகளினதா என அடையாளம் காணமுடியாவிட்டால், இது நிச்சயமாக இராணுவத்தினரின் போர்க்குற்ற மீறல் என சொல்லப்படுவதுடன், பெரியளவிலான பிரச்சனையையும் உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.

கோத்தவினுடைய இந்தப் புதைகுழியால், 2008ஆம் ஆண்டு சேர்பியாவிலிருந்து பிரிந்து எவ்வாறு கொசோவா விடுதலையடைந்ததோ, அதேபோல் வடக்குக் கிழக்கு தனியாகப் பிரிந்து விடுதலையடைவதற்கு ஐநா வழிவகுக்கும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.