தினகரனை சந்திக்க ராகுல் மறுத்தது ஏன்?

259 0

அ.ம.மு.க., – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்ற, தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி தலைவர் ஒருவரின் கோரிக்கைக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் செவிசாய்க்கவில்லை.

இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள், கூட்டணி அமைத்து போட்டியிடுவதில், ஆர்வம் காட்டி வருகின்றன. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, சமீபத்தில், சென்னை வந்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசித்தார்.

கடந்த, 15ம் தேதி, மதுரையில் நடந்த மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவை, தேர்தல் பிரசார துவக்க விழாவாக, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.லண்டனில் இருந்து, 18ம் தேதி சென்னைக்கு திரும்பிய, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், விரைவில், மாவட்ட வாரியாக, லோக்சபா தேர்தல் ஆய்வு கூட்டம் நடத்தவும் ஆலோசித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தனக்கு கீழ் பணிபுரிய வசதியாக, மாநில நிர்வாகிகளை நியமித்து விட்டு, தேர்தல் பணிகளை துவக்க உள்ளார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டி தலைவர் ஒருவர், கூட்டணி தொடர்பாக, தன்னிச்சையான முடிவை, ராகுலிடம் தெரிவிக்க விரும்பினார்.அதாவது, ‘தி.மு.க., அணியில், காங்கிரசுக்கு குறைந்த

சீட்டுகளை ஒதுக்கினால், அ.ம.மு.க., மக்கள் நீதி மையம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம்’என்ற விருப்பத்தை தெரிவிக்க, டில்லியில், அந்த கோஷ்டி தலைவர் காய் நகர்த்தினார்.

இதையடுத்து, டில்லியில், ராகுலை, திருமாவளவன், கமல், இயக்குனர் பா.ரஞ்சித் போன்றவர்கள் சந்தித்து, பேசினர்.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், 50தொகுதிகளில், காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட கூடிய தேர்தல் செலவுகளையும், தினகரன் ஏற்பார் என்ற தகவலும், ராகுலிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, ராகுலை சந்தித்து, கூட்டணியை உறுதிப்படுத்த, ஆந்திர மாநில, எம்.பி., ஒருவரின் உதவியில், தினகரன் தரப்பில் முயற்சி செய்யப்பட்டது.

இந்த தகவல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தெரிய வந்ததும், அவர், மகளிர் அணி செயலர் கனிமொழியை, டில்லிக்கு அனுப்பி, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் வாயிலாக, சோனியா, ராகுலை சந்தித்து, தமிழகத்தில் தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளார்.இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், ராகுலை சந்தித்து கூட்டணி குறித்து, சில யோசனைகளை தெரிவித்துள்ளார்.

அதாவது, ‘தினகரனுடன் இணைந்து, காங்கிரஸ் கூட்டணி அமைக்குமானால், பா.ஜ., எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும், தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ம.க., போன்ற கட்சிகளுக்கு பிரிந்து விடும்.
‘எனவே, தினகரனுடன் தனியாக கூட்டணி அமைக்காமல், தி.மு.க., கூட்டணியில், தினகரன் கட்சிக்கும் சேர்த்து சீட்டுகளை பெற்று, காங்கிரஸ் சார்பில் ஒதுக்கீடு செய்யலாம்’ என கூறியிருக்கிறார்.

இந்த யோசனையை ராகுல் ஏற்றுக் கொண்டதால், தற்போது, தினகரனை சந்திக்க, ராகுல் மறுத்துள்ளார். ‘ஸ்டாலின் நல்லவர்’ என, ராகுல் பாராட்டும் தெரிவித்து உள்ளார். அதாவது, நடப்பு

அவரது கடிதத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ஸ்டாலின், ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘இதுதொடர்பாக, ராகுல் எடுக்கும் முயற்சிகளுக்கு, முழு ஆதரவு தெரிவிக்கிறேன்’ என, குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலினின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, ராகுல் வெளியிட்ட அறிக்கையில், ‘உண்மை தலைவராகவும், தமிழகத்தின் முக்கிய நல்ல மகனாகவும் பேசியிருக்கிறீர்கள்.

‘இந்திய வளர்ச்சிக்கு பிரதானமானவர்கள், பெண்கள்; எல்லாக் கட்சிகளும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு அளித்து, நிறைவேற்ற வேண்டிய தருணம் இது’ என, கூறியுள்ளார். மேலும், ஆகஸ்ட், 30ல், மாநில சுயாட்சி மாநாட்டில், சோனியா பங்கேற்க வேண்டும் என, ஸ்டாலின், தன் மருமகன் சபரீசன் மூலமாக அழைப்பு விடுத்துள்ளார். சோனியா, சென்னைக்கு வரும்போது, லோக்சபா தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசலாம் என, சோனியா, ராகுலிடம், ஸ்டாலினும், சபரீசனும் தொலைபேசியில் பேசியுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Leave a comment