தியாகிகளுடன் துரோகிகளுக்கும் நினை­வுத் தூபியா?

676 0

வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் ஆளு­கைக்கு உட்­பட்ட தீரு­வில் பொதுப்­பூங்­கா­வில், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளின் நினை­வுத்­தூபி மாத்­தி­ரமே அமைக்­கப்­ப­ட­வேண்­டும். மாற்று இயக்­கங்­கள் உள்­ளிட்ட ஏனை­யோ­ருக்கு அங்கு நினை­வுத் தூபி அமைக்­கப்­ப­டக் கூடாது.

இவ்­வாறு வல்­வெட்­டித்­துறை நகர சபை­யில் கோரிக்கை முன்­வைக் கப்­பட்­ட­போ­தும், அதனை நிரா­க­ரித்து சக­ல­ரும் நினை­வுத் தூபி அமைக்­கும் தீர்­மா­னத்தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் 6 உறுப்­பி­னர்­க­ளும், ஈ.பி.டி.பி.யின் இரண்டு உறுப்­பி­னர்­க­ளும் இணைந்து நிறை­வேற்­றி­னர்
.
வல்­வெட்­டித்­துறை நகர சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் பொன்­னம்­ப­லம் சிவ­ஞா­ன­சுந்­த­ரம் தீர்­மா­னத்தை முன்­வைத்­தார்.

‘விடு­த­லைக்­கா­கப் போரா­டிய அனைத்து இயக்­கங்­க­ளின் போரா­ளி­கள், படை­யி­ன­ரா­லும் இன­வெ­றி­யா­ளர்­க­ளா­லும் கொல்­லப்­பட்ட ஒரு இலட்­சத்­துக்­கும் மேற்­பட்ட தமிழ் மக்­கள் நினை­வா­க­வும் ஓர் நினை­வுத் தூபி அமைக்­க­வேண்­டும். கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­பட 12 மாவீ­ரர்­கள் நினை­வுத் தூபியை முத­லில் கட்டி முடிக்­க­வேண்­டும். அதன் பின்­னர் மற்­றைய நினை­வுத் தூபி­யைக் கட்­ட­வேண்­டும்’ என்ற தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்­தார்.

சபை­யின் கடந்த அமர்­வி­லும் இதே தீர்­மா­னம் முன்­மொ­ழி­யப்­பட்டு அது தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­ன­ரால், கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளுக்கு மாத்­தி­ரம் நினை­வுத் தூபி அமைக்­கும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

கடந்த அமர்­வில் தோற்­க­டிக்­கப்­பட்ட தீர்­மா­னம் மீள­வும் சபைக்கு கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு எதிர்­கட்சி உறுப்­பி­னர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்­த­னர். தோற்­க­டிக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தில், திருத்­தங்­கள் மேற்­கொண்டு நான்கு உறுப்­பி­னர்­கள் கையெ­ழுத்­திட்­டால் அந்­தத் தீர்­மா­னத்தை மீள­வும் சபைக்கு கொண்டு வர­மு­டி­யும் என்று தவி­சா­ளர் தெரி­வித்­தார். தீர்­மா­னம் தொடர்­பில் உறுப்­பி­னர்­க­ளின் கருத்­துக் கேட்­கப்­பட்­டது.

இயக்­கம் இருந்­தால் இவ்­வாறு ஒரு தீர்­மா­னம் கொண்டு வரு­வீர்­களா? அது இயக்­கத்­துக்­கு­ரிய புனி­த­மான இடம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் கந்­த­சாமி சதீஸ் தெரி­வித்­தார். சுயேச்­சைக் குழு உறுப்­பி­னர் கணே­ச­மூர்த்தி கஜன், இலங்கை – இந்­திய கூட்­டுச் சதி­யால் கொல்­லப்­பட்ட தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் வீரர்­க­ளுக்கு மாத்­தி­ரமே அங்கு தூபி­அ­மைக்­கப்­பட வேண்­டும். அங்கு மாற்­றுக் கட்­சி­கள், இயக்­கங்­களை நினை­வு­கூர அனு­ம­திக்க முடி­யாது. அவ்­வாறு ஏனை­யோ­ருக்கு தூபி அமைக்­கப்­ப­டு­வ­தன் ஊடாக, கும­ரப்பா புலேந்­தி­ரன் உள்­ளிட்ட 12 வேங்­கை­க­ளின் தூபியை – வர­லாற்­றுச் சின்­னத்தை அழிக்­கும் செயற்­பா­டா­கவே பார்க்­க­வேண்­டி­யி­ருக்­கும் என்று சுட்­டிக்­காட்­டி­னார்.

சபை­யில் குழப்­ப­நி­லமை தோன்­றி­யது. தவி­சா­ளர் தீர்­மா­னம் மீது வாக்­கெ­டுப்பு நடத்­தி­னார். தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர்­கள் 6பேரும், ஈ.பி.டி.பியின் இரண்டு உறுப்­பி­னர்­க­ளும் வாக்­க­ளித்­த­னர். (கடந்த அமர்­வில் ஈ.பி.டி.பி. உறுப்­பி­னர்­கள், கூட்­ட­மைப்­பின் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருந்­த­னர்.)

சுயேச்­சைக் குழு உறுப்­பி­னர்­கள் 4பேர், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி உறுப்­பி­னர் ஒரு­வர், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் க.சதீஸ் ஆகி­யோர் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளித்­த­னர். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர் ஒரு­வர் தீர்­மா­னம் விவா­திக்­கும் போது சபை­யில் இருந்து அதனை எதிர்த்­தி­ருந்­தார். அலை­பேசி அழைப்பு வந்­த­தும், வாக்­கெ­டுப்­பில் பங்­கேற்­கா­மல் வெளி­யே­றி­னார்.

கூட்­ட­மைப்­பின் தீர்­மா­னம் ஒரு மேல­திக வாக்­கி­னால் நிறை­வே­றி­யது. இத­னை­ய­டுத்து வாக்­க­ளிப்பை எதிர்த்த 7 உறுப்­பி­னர்­க­ளும் வெளி­ந­டப்­புச் செய்­த­னர். அடுத்த அமர்வை நடத்த விட­மாட்­டோம். சபையை முடக்­கு­வோம். மக்­களை அணி­தி­ரட்­டிப் போராட்­டம் நடத்­து­வோம் என்று தெரி­வித்­த­னர்.

Leave a comment