போதைப் பொருளை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சி வெற்றி-ரணில்

372 0

போதைப்பொருள் விநியோக வலைப்பின்னலை முடக்குவதன் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இப்பாகமுவ மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பிரச்சினை காரணமாக இன்று சிறு பிள்ளையும் வீதியில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகம் முடக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அன்று போதைப்பொருள் விநியோகஸ்தர்கள் மாத்திரம் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்பட்டார்கள். பெருமளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a comment