கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

183 0

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  கர்நாடக அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து, தமிழகத்திற்கு அதிகப்படியான உபரி நீர் திறக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a comment