தமிழ் கட்சிகள் ஏழு, இந்திய பிரதமருக்கு கூட்டுக் கடிதம்

304 0

adஇந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு, இலங்கையில் உள்ள ஏழு அரசியல் கட்சிகள் கூட்டுக்கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற இலங்கை தமிழரசு கட்சி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ ஆகியனவும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.டி.பி. தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவும் இணைந்து இந்த கடிதத்தை கையளிக்கவுள்ளன.

இது தொடர்பில் குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று மாலை விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

காவிரி நீரை தமிழகத்துக்கு விநியோகிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்த தாக்குதல்களை நிறுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய பிரதமரிடம் குறித்த கூட்டுக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தப்படுகிறது.

இந்த கடிதம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிரகத்தின் கிளையிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.