புதிய அரசியலமைப்பு சட்ட மூலப் பிரதி புதன்கிழமை சமர்ப்பிப்பு- கலாநிதி ஜயம்பதி

180 0

புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்ட மூலப் பிரதியொன்று எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பு செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தள்ளார்.

பல தரப்பினராலும் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இந்த சட்ட மூலப் பிரதியில் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூலப் பிரதி புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கான ஒரு முன்னெடுப்புக் கடிதம் மாத்திரமே எனவும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன கூறியுள்ளார்.

Leave a comment