காணாமல் போனோர் விடயம் ஜெனீவா மாநாட்டில்

332 0

missing-peopleகாணாமல் போனோரின் விடயம் இன்றையதினம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின், பலவந்தமாக காணாமல் போதல்கள் தொடர்பான செயற்குழு, இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளது.

இதில் காணாமல் போனோர் தொடர்பில் குறித்த குழு இலங்கையில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இன்றையதினம் அரசாங்கமும் தமது பதில் அறிக்கைஒன்றை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது உள்ளக பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு எந்த அளவுக்கு அனுமதிக்கப்படும் போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.