விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதி – ஆறரை மணி நேர போராட்டத்துக்கு பின் இறுதியில் நுழைந்தார் கெவின் ஆண்டர்சன்

1 0

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதலாவது அரையிறுதியில் 8-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார்.
ஆண்டர்சன் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது  செட்களை 6-7, 6-7 என ஜான் இஸ்னர் கைப்பற்றினார்.
இறுதியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் ஆண்டர்சன் சிறப்பாக ஆடினார். அதனால் நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது சுற்று அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஆண்டர்சனும், இஸ்னரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்ட நேரம் கூடிக் கொண்டே போனது.
கடைசியாக,  ஆண்டர்சன் 26-24 என்ற கணக்கில் இஸ்னரை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.
இறுதியில்,  ஆண்டர்சன் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24  என்ற செட்களில் இஸ்னரை வென்றார். இந்த அரையிறுதி போட்டி சுமார் ஆறரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஜனாதிபதி தேர்தல்: 26-ந் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் – சோனியாகாந்தி ஏற்பாடு

Posted by - May 24, 2017 0
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாக டெல்லியில் நாளை மறுநாள் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்ட உள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் 5…

அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம் சந்திப்பு

Posted by - March 31, 2017 0
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசவிருப்பதாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏப்ரல் மாதம்…

ராணுவ தளபதி பிபின் ராவத் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் – அணுஆயுத போருக்கு சவால்

Posted by - January 14, 2018 0
எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும், யார் பலம் வாய்ந்தவர்கள் பார்த்து விடலாம் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் மிரட்டல் விடுத்துள்ளார். 

சீக்கிய மகாராஜா நினைவு தினம்: பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து சீக்கியர்கள் போராட்டம்

Posted by - June 29, 2017 0
சீக்கிய மகாராஜா நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சீக்கிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு நாளை தொடக்கம்

Posted by - August 17, 2018 0
45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.