கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக!

1 0

கனடாவில் கடலில் காணாமல் போன யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

கனடா, ஒன்டாரியோ ஏரிக்குள் விழுந்து காணாமல் போன 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனின் சடலமே நேற்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பார்த்தீபன் தனது நண்பர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் கடலில் தவறி விழுந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் ஒருமாத கால தீவிர தேடுதலின் பின்னர் அவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து பார்த்தீபனின் உறவினர்களுக்கு பொலிஸார் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அவரது இறுதிக்கிரிகைகள் எதிர்வரும் ஜுலை 8 ஆம் திகதி நடைபெறும் என குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். கைதடியைப் பிறப்பிடமாக கொண்ட பார்த்தீபன் சுப்ரமணியம், தனது பத்து வயதில் கனடாவுக்கு சென்றுள்ளார். இசைத்துறையில் DJ கலைஞராக செயற்பட்ட பார்த்தீபன் சுப்ரமணியம் கனடாவில் அதிக தமிழர்களால் நன்கு அறியப்பட்ட ஒருவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post

சிறிலங்கா அரசின் கோர முகத்தை இனம் காட்டும் வகையில் பேர்லினில் நடைபெற்ற துண்டுப்பிரசுர போராட்டம்

Posted by - February 2, 2017 0
எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற மிக…

லண்டனில் 107 மில்லியன் பவுண்ஸ் மோசடி! தமிழரின் சொத்துக்கள் பறிமுதல்

Posted by - October 1, 2017 0
பண தூய்மையாக்கலில் ஈடுபட்ட கும்பலின் தலைவரான தமிழர் ஒருவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கனடாவில் இலங்கையருக்கு தண்டனை

Posted by - August 10, 2016 0
கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கையருக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. லிங்கநாதன்…

படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவோம் – ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 5, 2018 0
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த இனவழிப்புகள்…

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் பல்லின மக்களுடனான ஒன்றுகூடல்

Posted by - December 12, 2016 0
சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற உலக சமாதானத்துக்கான மக்கள் ஒன்று கூடலில் நூற்றுக்கணக்கான பல்லின மக்கள் கலந்துகொண்டனர். இவ் ஒன்றுகூடலில் இன்றைய நாட்களில்…

Leave a comment

Your email address will not be published.