காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

278 2

NR.35170.1466627479-637x1024-720x480ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் இந்தச் சிறுவனைக் காணவில்லை எனவும், இவர் இறுதியாக Brimley மற்றும் Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் 12:30 மணியளவில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் நடுத்தர உயரமுடையவரெனவும், பிறவுன் நிற கண் மற்றும் கட்டையான கருப்பு நிற முடி கொண்டவரெனவும் விபரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவர் இறுதியாக எந்த ஆடை அணிந்திருந்தார் என கூறப்படவில்லை. இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

There are 2 comments

Leave a comment

Your email address will not be published.