மத்தியதரைக்கடலில் இருந்து 4500 குடியேற்றவாசிகள் மீட்பு

509 0

025-720x480மத்தியதரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 4500 குடியேற்றவாசிகளை இத்தாலிய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர்.

குறித்த காப்பாற்றல் நடவடிக்கை, நேற்று (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெவ்வேறு படகுகளில் வந்த குடியேற்றவாசிகளின் மத்தியில், பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், அவரது சடலம் தற்போது இத்தாலிய கடந்படையினர் வசம் உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சாதகமான காலநிலைகள் காணப்படுவதால், வடக்கு ஆபிரிக்காவில் இருந்து வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அண்மை காலம் தொட்டு அதிகரித்து வந்துள்ளது. மேலும், குடியேற்றவாசிகள் வலுவற்ற கப்பல்களில் பயணிப்பதனால், அவர்கள் உயிரிழக்கும் வீதமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

லிபிய கடற்கரையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் பல குடியேற்றவாசிகள் சாதரணமான, வலுவற்ற மற்றும் காற்றடைக்கப்பட்ட சிறு கப்பல்களில் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment