சசிகலா புஸ்பாவின் முன்பிணை மனு தள்ளுபடி

332 0

sasikala2-696x489_1472034200அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண், ‘சசிகலா புஸ்பா வீட்டில் வேலை செய்தேன். அவரது கணவர், மகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். சசிகலா புஸ்பாவிடம் கூறியபோது, இதை கண்டு கொள்ளாதே என்றார்’ என தூத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா புஸ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்தனர்.

சசிகலா புஸ்பா உட்பட 3 பேர் ‘எங்கள் மீதான குற்றச் சாட்டிற்கு ஆதாரமில்லை.

அரசியல் உள்நோக்கில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்பிணை அனுமதிக்க வேண்டும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சசிகலா புஸ்பா தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிபதி வேலுமணி தள்ளுபடி செய்தார்.

அவரது கணவர், மகன் தாக்கல் செய்த முன்பிணை மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்பிணை மனுவில், அவரது கையெழுத்து தொடர்பாக எழுந்த சந்தேகம் குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.