இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் தேசிய செயற்திட்டம்

306 0

இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்துள்ளது.

இதற்கான ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் நேற்று பெற்றுக்கொள்ளப்பட்டன. அரசியல் அற்ற தேசிய செயல் திட்டமொன்று இதுவரை இருக்கவில்லை என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நெவில் குருகே தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைய அரசாங்கம் அவ்வாறான ஒரு செயற்பாட்டிற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளது.

ஏதாவது ஒரு நிறுவனத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் இடம்பெறுமானால், அது குறிப்பிட்ட நிறுவனத் தலைவரின் பலவீனமாகும் என லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மட்டத்தில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமது நிறுவனத்திற்கு 200 விசேட விசாரணையாளர்களைச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 40 பேர் ஊழல் குற்றச்சாட்டில் தவறிழைத்தவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment