‘டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தி வரவேற்கத்தக்கது-அஜித்

198 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீன துறைமுக நிறுவனத்திடம் இருந்து  கடன்களை முறைகேடாக பெற்றுள்ளார் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியானது வரவேற்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோ தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதிக்கு சீன துறைமுக நிறுவனம் 7.6 பில்லியன் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் அரசாங்க தரப்பில் எவ்வித  ஆவணங்களும் காணப்படவில்லை.

இந் நிலையில் கடன்களை பெற்றுக்கொள்ளும் போது கடந்த அரசாங்கம் பல சூட்சமமான விடயங்களை பின்பற்றியுள்ளமையே இன்று பாரிய சிக்கல்களை தேசிய அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடின் இந்த முறையற்ற கடன்கள் எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

Leave a comment