வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு நியமனம்-மாவை

353 0

வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்கள் 425 பேருக்கு எதிர்வரும் 22ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக தலைமை அமைச்சர் செயலகம் அறிவித்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் கடந்த கால நியமனங்களின் போது அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டனர். தொண்டர் ஆசிரியர்களுக்கு மீண்டும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
‘தொண்டர் ஆசிரியர்கள் 790பேருக்கு இரண்டு கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களிலிருந்து 425பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தலைமை அமைச்சர் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.நேர்முகத் தேர்வுக்குத் தோற்றியோர் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற எமது கோரிக்கையை தலைமை அமைச்சரிடம் வலியுறுத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment