பிரித்தானியாவின் வெளியேற்றம் – தலைவர்கள் கருத்து

6272 0

160123050132_uk_eu_flag_512x288_reuters_nocreditபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ளமையை தொடர்ந்து ஏனைய நாடுகளும் தத்தமது உரிமைகளை கோரி கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

பிரான்ஸின் தேசிய முன்னணி தலைவர் மெரீன் லெ பென் (Marine Le Pen) இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, ‘தற்போது பிரான்ஸிற்கும் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு’ என தெரிவித்துள்ளார்.

அதே போல், நெதர்லாந்தின் குடியேற்ற எதிர்ப்பு தொடர்பில் குரல்கொடுக்கும் அரசியல்வாதி கிரீட் வில்டர்ஸ் (Geert Wilders) இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த போது, “அடுத்ததாக Nexit வாக்கெடுப்பு ஒன்று நடைபெற வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதை போல், இத்தாலியும் “அடுத்தது எமது வாய்ப்பு” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் வெளியேற்றத்தால், பங்குச்சந்தைகளின் அளவும் குறைவடைந்துள்ளதோடு ஸ்ரேலிங் பவுணின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளமை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலைமைகள் தொடர்பில் கலந்தரையாடும் பொருட்டு ஐரோப்பிய நாடாளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்கிழமை கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

Leave a comment