யாழ்பாண மயிலிட்டி துறைமுகத்தில் புதிய மாற்றம்

234 0

யாழ்ப்பாணம், மயிலிட்டி துறைமுகம் சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.குறித்த அபிவிருத்தி செயற்பாட்டை யூ.என்.டீ.பி மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.

இதற்கமைய நேற்று (வியாழக்கிழமை) மத்திய கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யூ.என்.டீ.பி அதிகாரிகள் நேரில் சென்று மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தெல்லிப்பழை பிரதேச செயலாளர் வலி,வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மயிலிட்டி துறைமுகத்தை ஆழப்படுத்துதல், மீன்பிடி படகுகளுக்கான எரி பொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், மீனவர்களுக்கான மலசலகூடம் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment