மருத்துவ துறையில் கால்பதிக்க இருக்கும் அமேசான் நிறுவனம்

308 0

பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான்.காம், தற்போது மருத்துவ துறையிலும் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. 

அமேசான்.காம் என்பது அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இதன் தலைமையகம் வாஷிங்டன் நகரில் உள்ள சியாட்டல் பகுதியில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்சு நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
1994-ம் ஆண்டு ஜெப் பெசோஸ் என்பவரால் அமேசான் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்பின் 1995-ம் ஆண்டு இணையதள வணிக முறை வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு இணையப் புத்தக அங்காடியாகத் தொடங்கப்பட்டது. விரைவில் பலத்தரப்பட்ட பொருள்களை விற்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில் பொருட்களை தனது வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் தற்போது மருத்துவ துறையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ‘பில்பேக்’ எனப்படும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமேசான் நிறுவனம் இனி மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
பில்பேக் நிறுவனம் தற்போது அமெரிக்காவில் மட்டும் செயல்பட்டு வருகிறது. தற்போது அமேசான் நிறுவனத்துடன் இணைந்திருப்பதால் இனி உலகம் முழுவதும் பில்பேக் நிறுவனம் மருந்துகளை விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment