பாவனையின்றி காணப்படும் பொதுமக்களின் காணிகள் மாநகரசபையால் கையகப்படுத்த நடவடிக்கை!

236 0
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் பாவ னையின்றி கவனிப்பாரற்று காண ப்படுகின்ற காணிகளை மாநகர சபை தற்காலிகமாக கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநகர மக்களின் பாதுகாப்பை யும் மாநகரத்தின் தூய்மையை யும் கருத்திற்கொண்டே மேற்படி நடவடிக்கையை மாநகர சபை எடு ப்பதென நேற்றைய அமர்வில் தீர் மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபையின் அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் தலை
மையில் நேற்று நடைபெற்றது. இதன் போது மக்கள் பாவனையில்லாது கவனிப்பா ரற்று காணப்படுகின்ற காணிகளில் இருக்கி ன்ற பற்றைகளால் ஏற்படுகின்ற நோய்த் தாக் கம் உட்பட பொது மக்களுக்கு பல்வேறு பாதி ப்புக்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து அவ்வாறு காணப்படுகி ன்ற காணிகளை மாநகர சபை தற்காலிக மாக பொறுப்பெடுப்பதென சபையின் உறுப்பி னர்கள் அனைவரதும் ஆதரவுடன் தீர்மானி க்கப்பட்டு அதற்குரிய நடவடிக்கைகளை தொடர்வதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகரத்தை தூய்மையாக்கி அழகுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெ டுப்பதென்றும் அவ்வாறு தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கின்ற போது நகர த்தின் பசுமை அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தப்ப ட்டுள்ளது.

Leave a comment