உரையை சுருக்கி தவறான அர்த்தம் கொண்டது தவறு-உபாலி தேரர்

215 0

தான் சொல்லவந்த விளக்கம் வேறு எனவும், தன்னுடைய நீண்ட உரையை சுருக்கி ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு முழுமையாக அர்த்தப்படுத்துவது தவறாகும் என்றும் அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்த நாட்டின்  அரசியல் தலைவர்கள் கூட தூக்கிப் பிடித்து விமர்சிப்பது வருத்தமளிப்பதாகவும் தேரர்  வௌியிட்டுள்ள விசேட அறிக்கையில் கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் தான் தெரிவித்த கருத்து தொடர்பில் விளக்கமளிப்பதற்காக தேரரினால் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

நாட்டை ஆட்சி செய்யும் போது நேரடியான கொள்கை இருக்க வேண்டும் என்றும் ஹிட்லர் போன்று மனிதர்களை கொலை செய்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற அர்த்தப்பட தான் கூறவில்லை என்றும் வெடருவே உபாலி தேரர் விளக்கமளித்துள்ளார்.

Leave a comment