அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆவணம் நேற்று பிற்பகல் வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனினால் இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணம் முழுவதும் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சுமார் மூன்று இலட்சம் கையெழுத்துகள் அண்மையில் சேகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், கையெழுத்துகள் அடங்கிய ஆவணம் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

