மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுகின்றன!

3 0
 

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் அகழ்வு பணிக்காக திட்டமிட்ட இடங்களில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் தென்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

மன்னார் சதொச நிர்மான வேலையின்போது இவ் வருடம் மார்ச் மாதம் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து நேற்றுடன் 19 வது நாளாக அகழ்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அகழ்வு பணியின்போது ஒரு பகுதியினர் குழிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை துப்பரவு செய்து வெளியில் எடுக்கும் பணியிலும்

இன்னொரு சாரார் அகழ்வுக்காக அளவீடு செய்யப்பட்ட இடத்தை அகழ்வு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். இப் பணியின்போது தொடர்ந்து மனித மனித எச்சங்கள் தென்படுவதையும் காணக்கூடியதாக இருந்தது.

இன்று பகல் 12.30 மணியளவில் அகழ்வு பணியை இடை நிறுத்தப்பட்டு மீண்டும் திங்கள் கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.ஐ.பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற குறித்த அகழ்வு பணியானது சட்டவைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ, தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஐ; சோம தேவ், தடயவியல் நிபுணத்துவ பொலிசார் ஆகியோர் இவ் பணியில் ஈடுபடுவதுடன்  காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலுள்ள பிரதிநிதிகள் இங்கு சமூகளித்திருந்தனர்.

அத்துடன் இதில் பணி செய்யும் வைத்திய கலாநிதிகள் தொல்பொருள் ஆய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தங்குவதற்கான சரியான இட வசதிகள் இல்லாதக் குறைகளும், உணவு, போக்குவரத்து வசதிகள் அற்ற நிலைகளும் காணப்படுவதால் இவைகள் சம்பந்தமாக திங்கள்கிழமை பிற்பகல் நீதவான் தலைமையில் கலந்துரையாடப்பட இருப்பதாகவும் தெரியவருகிறது

Related Post

மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

Posted by - February 26, 2017 0
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி…

ஓமந்தையில் டிப்பருடன் கோர விபத்து!

Posted by - May 25, 2018 0
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மீது டிப்பர் வாகனம் நேருக்கு நேர் மோதியது என்று கூறப்படுகின்றது. வவுனியா, ஓமந்தையின் இன்று மதியம் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர்…

யாழ் சுண்டுக்குழியில் ஆசிரியையின் தாலிக்கொடி திருடர்களால் அறுப்பு

Posted by - July 11, 2017 0
வீதியால் சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் 10 பவுண் தாலிக்கொடியை திருடர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். குறித்த ஆசிரியை யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் கல்விகற்பிப்பவர் என தெரியவருகின்றது. நேற்று…

பல்கலைகழக பணியாளர்களின் போராட்டத்தினால் பாதிப்பு

Posted by - July 29, 2016 0
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக, நாட்டில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் நாளாந்த செயற்பாடுகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன.பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.தேவன…

காணாமல் போனவர்கள் கடலில் வீசப்பட்டனரா?

Posted by - January 31, 2018 0
வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்,யுவதிகளின் உடலங்கள் கடலில் வீசப்பட்டுள்ளமை மீண்டும் உறுதியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.