125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற வழக்கு 28ம் திகதி விசாரணைக்கு

400 0

125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுங்க அதிகாரிகள் நால்வருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி சசி மஹேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், அன்றைய தினம் வழக்குடன் சம்பந்தப்பட்ட கணினி சாட்சிகள் அனைத்தையும் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் முறைப்பாட்டாளர்களும் சாட்சியாளர்களும் பாதிப்படைவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.´

இதன்போது இந்த வழக்கை புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விஷேட மேல் நீதிமன்றில் விசாரிக்க முடியுமா என்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பான சட்டத்தரணியிடம் நீதிபதி வினவினார்.

எவ்வாறாயினும் வழக்கை எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2015ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதுரிபாகங்கள் சிலவற்றை விடுவிப்பது தொடர்பில் சந்தேகநபர்கள் 125 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment