ஞானசார தேரர் பிணையில் விடுதலை

192 0

குற்றவாளியாக இனம் காணப்பட்டு 6 மாதகால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்துவந்த கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தன்னை நிரபராதியாக அறிவித்து விடுதலை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது ஞானசார தேரருக்கு எதிராக பிணை நிபந்தனையாக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, இன்று விசாரணையின் போது ஞானசார தேரர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட ஞானசார தேரருக்கு கடந்த 14ஆம் திகதி 6 மாதங்களில் நிறைவடையக்கூடிய வகையில் 1 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment