துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

306 0

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரிகம ​ஹோட்டலுக்கு அண்மையில், இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், இத்தாசி ஷமிந்த குமார என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஜபா படையணியில் சேவையாற்றிய இவர், 2008 ஆம் ஆண்டு முதல், கடமைக்கு சமூகமளிக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலைச் செய்யப்பட்ட நபரிடமிருந்து ஆயுதங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், அவர், மூன்று படுகொலைகளுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment