93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா!

348 0

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி  ரே ரென், துறைமுக அதிகாரசபைத் தலைவர் பராக்கிரம திசநாயக்கவிடம், இறுதிக்கட்டக் கொடுப்பனவுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

முதல்கட்டத் தொகையான 292 மில்லியன் டொலர், கடந்த ஆண்டு டிசம்பரிலும், இரண்டாம் கட்டத் தொகையான 97 மில்லியன் டொலர் கடந்த ஜனவரியிலும் வழங்கப்பட்டிருந்தது.

Leave a comment