பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொருட்களை ஏற்றுமதி செய்யும் பகுதியில் வைத்து நேற்று (20) அரிய வகை ஆந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆந்தை, கூகை ஆந்தை (Barn owl) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை ஆந்தைகள் பொதுவாக கிராமப் புறங்களில் வசிப்பதாகவும் அது எவ்வாறு விமான நிலையத்திற்குள் வந்தது என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆந்தையை பொருத்தமான இடத்தில் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

