ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும்

221 0

தேசிய பாடசாலைகளின் அதிபர்கள், எதிர்வரும் காலங்களில் ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் மாத்திரமே சேவையாற்ற முடியும் எனக் கல்வி சேவைகள் குழு தீர்மானித்துள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த கால எல்லை 10 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதனை 8 ஆண்டுகளாகக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், கல்வி நிர்வாக சேவையின் ஏனைய அனைத்து அதிகாரிகளும் 6 வருடங்களுக்கு மாத்திரமே ஒரு இடத்தில் சேவையாற்ற முடியும் என்ற கொள்கைக்கு அடுத்தவராம் அனுமதி பெறப்பட உள்ளதாக கல்விச் சேவைகள் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் சேவைக்காலம் தொடர்பில் இதுவரை தெளிவான கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என குறித்தஅதிகாரி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment