ஜனாதிபதியின் ஐ.நா. கூட்ட விஜயத்துக்கு 12 அரைக் கோடி ரூபா செலவு-நிரோசன் பெரேரா

320 0

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக் குழுவுக்கு பன்னிரண்டரைக் கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இத்தூதுக்குழுவில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 60 பேர் பயணித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மம்பில வாய் மொழி மூல பதிலொன்றை எதிர்பார்த்து கேட்ட வினாவுக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு  அறிவித்துள்ளார்.

Leave a comment