பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு விரைவில் சேவைக்கு திரும்பவும் – ரோஹண அபயரத்ன

293 0

தபால் சேவையாளர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு விரைவில் சேவைக்கு திரும்புவதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தபால் மா அதிபர் ரோஹண அபயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 200 வருடகாலமாக மக்களுக்கு சேவை வழங்கிவரும் தபால்சேவை பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

தற்போது தபால் சேவைக்கான பிரதியீடுகளாக பல்வேறு இணையத்தள வழியான சேவைகள் காணப்படுகின்றன. எனவே தபால் சேவைக்கான போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான போட்டிகளுக்கு முகங்கொடுத்து அவற்றில் வெற்றிபெற்று எதிர்காலத்தில் தபால் சேவையை வினைத்திறனுடையதாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

எனவே கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். ஆகவே பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு சேவையாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment