நிரவ் மோடியை நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை!

217 0

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்திக்கொண்டு வந்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த ஊழல் அம்பலத்துக்கு வருவதற்கு முன்பே அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.முதலில் அவர் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அவர் அங்கு இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுதொடர்பான நடவடிக்கையை இந்தியா எடுக்கலாம் என இங்கிலாந்து அரசு வக்கீல்கள் கூறி உள்ளனர். எனவே இதற்கான நடவடிக்கையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.

இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “நிரவ் மோடி எங்கே இருக்கிறார் என உறுதியாக கூற முடியவில்லை. அவர் இங்கிலாந்தில் இருக்கலாம். அங்கு இருந்து வெளியேறியும் இருக்கலாம். இருப்பினும் அவரை நாடு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இங்கிலாந்து அரசு வக்கீல்கள் (சி.பி.எஸ்.) கூறி உள்ளனர். எனவே இது தொடர்பான நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. அதன் பேரில் இங்கிலாந்து வாரண்டு பிறப்பிக்கும். அதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய முடியும்” என்று குறிப்பிட்டார்.

Leave a comment