சரக்கு கப்பலில் திடீர் தீ விபத்து – 22 ஊழியர்கள் பத்திரமாக மீட்பு

6 0

ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியா துறைமுகம் அருகே வங்கக்கடலில் ‘எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா’ என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், கடற்படை அதிகாரிகளிடம் உதவி கேட்டனர். இதையடுத்து கடற்படை கப்பல் மற்றும் சரக்கு விமானத்தில் வீரர்கள் சரக்கு கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காற்று மற்றும் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் அந்த கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்த கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணி நடந்தது.

Related Post

சவுதிஅரேபியாவில் ஆப்பிள்-அமேசான் நிறுவனங்கள் முதலீடு

Posted by - December 29, 2017 0
ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் அரேபியா நாடுகளில் ஒன்றான சவுதிஅரேபியாவில் வர்த்தக முதலீடு செய்ய உள்ளது.

மலேசியா மன்னர் சுல்தான் முஹம்மது முடிதுறந்தார்

Posted by - January 7, 2019 0
ரஷியா நாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட கிசுகிசுக்கப்பட்ட மலேசியா நாட்டின் மன்னர் ஐந்தாம் முஹம்மது இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள…

சுற்றுலாப் பயணிகளுடன் மலேஷிய படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

Posted by - January 29, 2017 0
சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த மலேஷிய படகு ஒன்று காணாமல் போய் உள்ளதாக மலேஷிய கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். காணாமல் போன படகில் 28 சுற்றுலாப் பயணிகள் உட்பட…

பனாமா ஊழல்: சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல்

Posted by - November 16, 2016 0
‘பனாமா’ ஊழல் வழக்கில், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் சொத்து பட்டியல் தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைப்பது பற்றி நாளை முடிவு…

கிரீஸில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி!

Posted by - July 24, 2018 0
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published.