அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த ஆய்வு ரத்து

10 0

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற இருந்த வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு அறை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோரை விசாரணை ஆணையம் நியமித்து உத்தரவிட்டது. இந்த வக்கீல்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்ய இருந்தனர்.

இந்தநிலையில், வக்கீல்களின் ஆய்வை திடீரென ரத்து செய்து விசாரணை ஆணையம் நேற்று இரவு உத்தரவிட்டுள்ளது. வக்கீல்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக முன்னேற்பாடுகளை செய்யவில்லை என்றும், அதனால் மற்றொரு நாளில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாகவும், அதை ஏற்றுக் கொண்டு இன்று நடைபெற இருந்த ஆய்வுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Post

ஒக்கி புயல் பாதிப்பு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குமரியில் இன்று ஆய்வு

Posted by - December 12, 2017 0
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

தி.மு.க.வை ஊழல் கட்சி என்பதா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - September 24, 2018 0
தி.மு.க.வை ஊழல் கட்சி என்று பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்தை பழி வாங்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 18, 2017 0
தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்று தர்மபுரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

விபத்தில்லா சென்னை – 240 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - July 10, 2016 0
சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடம் தமிழகம்

Posted by - November 20, 2017 0
ஆசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த இடமாக தமிழகம் திகழ்வதாக சென்னையில் நடந்த வர்த்தக உச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a comment

Your email address will not be published.