தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை! – சுவிற்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு! காணொளி

13991 30

14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது.
விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து.
உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)யை ஒரு குற்றவியல் அமைப்பாகக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது.
விசாரணையில் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நிபந்தனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என பெடரல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://youtu.be/qrpITQRbt4w

14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்பு வழங்கியது.ஏனை மூன்று முன்னை நாள் புலி உறுப்பினர்களுக்கும் வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காக தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டு களுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.

அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை நீதிமன்றம் நிராகரித்தது.சீவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்தது.

செய்தி: நீதிமன்றத்தில் இருந்து சிவமகிழி

https://youtu.be/jwf0CoQyV0c

https://youtu.be/ioatsftElYU

Leave a comment