யூரோ – 4 அறிமுகத்தால் 92 ஒக்டேன் பெற்றோல், ஒடோ டீசல் ஆகியவை சந்தையில் நீங்காது

235 0

ரோ – 4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து 92 ஒக்டேன் (92 octane) பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் (auto diesel) என்பவை நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ´யூரோ – 4 எரிபொருள் அடுத்த மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வருகின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யூரோ-4 தரத்திற்கான ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவை அறிமுகப்படுத்தப்படும் நிலையில், தற்போது உள்ள ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

அதேவேளை அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையானது தற்போதைய விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

யூரோ – 4 என்பது ஐரோப்பிய யூனியனால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் தரமாகும். இந்த தரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளானது சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் வாகனங்களின் தரத்தையும் உறுதிப்படுத்தும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பவை இணைந்தே இந்த புதிய தரத்திலான எரிபொருளை அடுத்தமாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

இதேநேரம் யூரோ 04 அறிமுகமானதும் சாதாரண தரத்திலான பெற்றோல் ஒக்டேன் 95 மற்றும் சுபர் டீசல் ஆகியவை சந்தையில் இருந்து நீங்க வழிவகுக்கும்.

ஆனால் எரிபொருள் சந்தையில் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவற்றுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த புதிய ரக யூரோ 04 எரிபொருள் எமது சுற்றாடலுக்கும் வாகனங்களுக்கும் பிரதிகூலமாக அமையும்´ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment