கொழும்பில் 6 இலட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை

210 0

கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை என்று கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வுகாணும் வகையில், கொழும்பு நகருக்கான நீர் விநியோகத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதற்கமைய நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீர் விநியோகக் கட்டமைப்பு நவீனமயப்படுத்தப்படவிருக்கிறது. 600 கிலோமிற்றர் தூரத்திற்கு புதிய குழாய்கள் பொருத்தப்படவிருக்கின்றன. ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கென 40 பில்லியன் ரூபாவை வழங்குகிறது என்றும் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment