காணாமல் போனோர் அலுவலகம் இன்று திருகோணமலையில் சந்திப்பு!

4 0

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய ரீதியிலான நான்காம் கட்ட பொதுமக்கள் சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெறவுள்ளது.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமாக உள்ளதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 12.30 வரை திருகோணமலையை சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்பங்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, பிற்பகல் 12.30 முதல் ஒருமணிவரை ஊடக சந்திப்பும், பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணிவரை சிவில் சமூக அமைப்புகளுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக காணாமல் போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் நிறுவனத் திட்டம் மற்றும் மூலோபாயங்களை பகிர்ந்து கொள்ள காணாமல்போன நபர்களின் குடும்பங்கள், சிவில் சமுக அமைப்புக்கள், காணாமற்போனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள், ஊடகங்களை காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும் இதன்போது சந்திக்க உள்ளனர்.

முன்னதாக மன்னார், மாத்தறை, முல்லைத்தீவு முதலான மாவட்டங்களில் காணாமல்போனோருக்கான அலுவலகம் சந்திப்புக்களை நடத்தியிருந்தது.

இந்த சந்திப்புக்கள், காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ளப்படக்கூடிய பொதுமக்களின் கண்ணோட்டங்களை கேட்டறிய உதவுவதாக காணாமல்போனோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Post

இலங்கை வரும் மோடிக்கு 6 ஆயிரம் காவல்துறை படையணி

Posted by - May 7, 2017 0
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பொருட்டு 6 ஆயிரம் காவற்துறை படையணியினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இதனை…

கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் வடக்கிலும் கிழக்கிலும்

Posted by - April 27, 2017 0
தழிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் இம்முறை வடமாகாணத்திலும்,கிழக்கு மாகாணத்திலும் நடாத்த தழிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தழிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட…

சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - April 19, 2018 0
சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்  மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று  இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி  தமிழ் மக்கள்…

பொதுமக்களின் காணிளில் கடற்படையினர் மரநடுகை

Posted by - July 22, 2017 0
முள்ளிவாய்க்கால்-வட்டுவாகல் பொதுமக்களின் காணிகளை சுவிகரித்துள்ள கடற்படையினர் அங்கே மரநடுகை திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். மக்களின் காணிகளை உள்ளடக்கி கடற்படையினர் தமது கட்டுப்பாட்டடு வளாகத்தை சுற்றி நீண்ட வேலி…

மாவா பாக்கை வைத்திருந்தவர் கைது!

Posted by - March 5, 2019 0
மாவா பாக்கு போதைப்பொருளை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் நெல்­லி­ய­டி­யில் நேற்று மாலை ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் யாழ்ப்பாணம் கர­ண­வா­யைச் சேர்ந்­த­வர் என்­றும் 26 வய­து­டை­ய­வர் என்­றும்…

Leave a comment

Your email address will not be published.