காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும்

415 0

நாட்டிலும் நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசத்திலும் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சுற்றி விசேடமாக மேற்கு, தெற்கு, மத்திய, வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அடிக்கடி மணித்தியாளத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேற்கு, சப்ரகமுவ, மத்திய ,தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஓரளவுக்கு மழைபெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment