அதிவேக நெடுஞ்சாலையில் லொறி தீப்பற்றியது

334 0

தெற்குக்கான அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்று, இன்று நண்பகல் 12.10 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.

கடவத்தையிலிருந்து மாத்தறை நோக்கி, ஆடைகளை ஏற்றிச்சென்ற கென்டர் ரக லொறியொன்றே, இவ்வாறு தீப்பற்றியுள்ளதென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சம்பவத்தில், லொறியில் பயணித்த எவருக்கும் எவ்வித ஆபத்தும் ​ஏற்படவில்லையெனத் தெரிவித்த பொலிஸார், ​கெலனிகம நுழைவாயில் பொலிஸார், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Leave a comment