நகல்ஸ் காணிகள் தனியாருக்கு வழங்கப்படவில்லை-லக்ஷ்மன் கிரியெல்ல

387 0

பாதுகாக்கப்பட்ட நகல்ஸ் வனப் பிரதேசத்திற்கு உரித்தான காணிகள் எந்தவொரு தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது முதலீட்டாளர்களுக்கோ வழங்கப்படவில்லை என்று தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நேற்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்ற தோட்டக் கம்பனிகளுக்கு கழிவு நிலங்கள் மாத்திரம் தனியார் முதலீட்டுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a comment