மத்தளைக்கு நாளாந்தம் வருகை தந்த விமான சேவை நிறுத்தம்

1076 0

மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு நாளாந்தம் வருகை தந்த (Fly Dubai) விமானம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Fly Dubai விமான சேவைக்குரிய விமானம் ஒவ்வொரு நாளும் காலை மத்தள விமான நிலையத்துக்கு வருகை தருவதுடன், யால, அம்பாறை, பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு உல்லாச பயணிகள் இந்த விமான சேவையை பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒக்டோபர் 18ம் திகதி முதல் இந்த விமான சேவை வருவது நிறுத்தப்பட்டுள்ளதாக வாய்மூலம் அறிவித்துள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment