தங்களுடன் இணைந்து கொள்ள வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்காமல் இருப்பதற்கு தன்னால் முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இவ்வாறு வருபவர்கள் எம்மை ஏசியவர்களாக இருக்கலாம். எமக்கு எதிராக செயற்பட்டவர்களாக இருக்கலாம். எம்மை விட்டுச் சென்றவர்களாக இருக்கலம். யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்பதனைத் தவிர வேறு வழியில்லை என்றே கருதுகின்றேன்.
இவ்வாறு வருபவர்களை வரவேற்காவிடின் நாம் தொடர்ந்தும் சிறு குழுவுடன் எதிர்க் கட்சியில் இருப்பதற்கே ஏற்படும். பிரதேச அரசியலுக்கும், தேசிய அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பிரதமருக்கு திருடன் என்கின்றார். பிரதமர் ஜனாதிபதிக்கு திருடன் என்கின்றார். தற்பொழுது 118 பேர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது. இதுதான் இன்று நாட்டின் அரசியல் நிலவரம்.
இதனால், இந்த அரசாங்கத்தை விரைவில் வெளியேற்றுவதற்காக வருகின்ற அனைவருடனும் கைகோர்க்க வேண்டியுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் தெரிவித்தார்.
மஹரகம நகர சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வு ) மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

