சித்தார்த் சட்டர்ஜி தொடர்பில் சிக்கல்

359 0

siddharth-chatterjeeஇலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மேஜராக இருந்த சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் தொடர்ச்சியாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் மறுமகனான அவருக்கு, பான் கீ மூன் தமது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இந்த பதவியை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சித்தார்த் சட்டஜீ யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகளுடன் தொடர்பு கொண்டதாகவும், கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் சடலங்களுடன் புகைப்படங்களில் தோன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது யுத்தக்குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும், இன்னர்சிட்டி பிரஸ் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் அவருக்கு ஐக்கிய நாடுகளின் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பதில் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.