ஜெனீவா மாநாடு இன்று ஆரம்பம்

312 0

geneva-un_4ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தமது அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை முன்வைக்கவுள்ளது.

அதேதினத்தில் இந்த அறிக்கை விவாதத்துக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் தரப்பிலும் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்ற அறிக்கை ஒன்று முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதன்போது உள்ளக பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.