பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

6 0

தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட முதற் தற்கொடையாளர் தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 44ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். “தமிழpன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்டவர்” தியாகி பொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற்கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி தாயகம் அடங்கலாக தமிழீழ மக்கள் வாழும் தேசங்கள் எங்கும் தமிழீழ மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.

நன்றி
வெளியீட்டுப்பிரிவு
அனைத்துலகத்தொடர்பகம்

Related Post

டெக்சாஸ் வெள்ளத்தில் தவித்த பெண்! கனடாவில் இருந்து காப்பாற்றிய தமிழ் இளைஞன்

Posted by - September 1, 2017 0
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பெண்ணுக்கு கனடா தமிழர் ஒருவர் உதவிய சம்பவம் ஒன்ற பதிவாகியுள்ளது.

கடற்படைத் தளபதி ட்ராவிஸ் சின்னையாவுக்கு விரைவில் ஓய்வு!

Posted by - September 27, 2017 0
அண்மையில் கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற தமிழரான ட்ராவிஸ் சின்னையா விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Posted by - May 8, 2017 0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

வலி.வடக்கில் பலாலி உள்ளிட்ட சில பகுதிகள் சுவீகரிப்பது உறுதி -யாழ்.கட்டளைத்தளபதி மகேஸ் சேனநாயக்க-

Posted by - August 27, 2016 0
வலி.வடக்கு பலாலி விமான நிலையத்திதை சூழ்ந்த பகுதிகள் உட்பட மேலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க குறித்த…

யார் முதுகில் குத்த வேண்டிய அவசியம் எமக்கில்லை – சுரேஸ்

Posted by - September 4, 2018 0
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள். நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்த வேண்டிய அவசியமில்லை என ஈழ மக்கள்…

Leave a comment

Your email address will not be published.