எஞ்சியவர்களும் வெளியேற வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு- S.B.

320 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரின் தீர்மானம் சரியென ஜனாதிபதி கருதுவதாகவும், ஏனையோர் விலகாமல் இருப்பது ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாகவும் 16 பேர் கொண்ட குழு உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்து கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்த கூட்டணியே 2020 இல் போட்டியிடப் போகும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அடுத்த மாகாணசபைத் தேர்தலிலும் கூட்டணியொன்றே போட்டியிடும்.  தற்போதைய தேசிய அரசாங்கம் அதன் எஞ்சிய 18 மாத காலத்தையும் முழுமையாக பூர்த்தி செய்யாது எனவும் அவர் ஹேஷ்யம் கூறியுள்ளார்.

Leave a comment