தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் திட்டவட்டம்

8625 230

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதுப்பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. பொதுமக்கள் நிபா வைரஸ் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்துக்கு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

சேலம் தனியார் மருத்துவமனையில் உடலுறுப்பு திருட்டு நடைபெறுவதாக கேரள முதல்வர் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிலிம் தட்டுப்பாடு இருப்பதாகத் தகவல் தற்போதுதான் வந்துள்ளது. பிலிம் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment